"டியூட்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள "டியூட்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
"டியூட்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் டியூட். இந்த படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மமிதா பைஜு நடித்துள்ளார்.

காதல், காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் பரிதாபங்கள் ராகுல், நேகா ஷெட்டி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்துள்ளது.

இதற்கிடையில், ரசிகர்கள் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 14 ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com