இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்


இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
x
தினத்தந்தி 30 Jan 2025 7:03 PM IST (Updated: 31 Jan 2025 1:23 PM IST)
t-max-icont-min-icon

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

'மோனா 2'

மோனா என்பது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஹாலிவுட் அனிமேஷன் படம் மோனா. வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இதன் முதல் பாகம் 2016-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இந்த பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மவ்வி கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீரர் ராக் நடித்துள்ளார். கடலில் நடக்கும் சாகங்கள் இடம் பெற்றுள்ள இப்படம் கடந்த 27-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'தி பயர் இன்சைட்'

தி ஃபயர் இன்சைட் என்பது ரேச்சல் மோரிசன் இயக்கிய குத்துச் சண்டை படமாகும். இது கிளாரெசா ஷீல்ட்ஸின் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பிரையன் டைரி ஹென்றி, ஆடம் கிளார்க் ஆகியோருடன் ரியான் டெஸ்டினி கதாநாயகனாக நடித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 8.1 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இப்படம் கடந்த 28-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'புஷ்பா 2'

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று (30-ந் தேதி) நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'ஐடென்டிட்டி'

திரிஷா மற்றும் டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். கடந்த 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் நாளை (31-ந் தேதி) ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'எமக்கு தொழில் ரொமான்ஸ்'

அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயகத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட், டென்ட்கொட்டா, சிம்பிலி சவுத் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

'பயாஸ்கோப்'

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 3-ந் தேதி வெளியான படம் 'பயாஸ்கோப்'. இப்படத்தை 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். முற்றிலும் கிராமத்து புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். 'வெங்காயம்' என்ற படம் எப்படி உருவானது என்ற உண்மை சம்பவ பின்னணியே 'பயாஸ்கோப்' படத்தின் கதை. இந்த நிலையில் இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'தோழர் சேகுவேரா'

சத்யராஜ் நடிப்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தோழர் சேகுவேரா. இப்படத்தில் மொட்டை ராஜேந்தர், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அதிகார வர்கத்திற்கும் தொழிலாளி வர்கதுக்கும் இடையே நடக்கு போர் மற்றும் பாகுபாடுகளை பேசக் கூடிய படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'செவப்பி'

எம்.எஸ்.ராஜா எழுதி இயக்கத்தில் கிராமத்தில் வசிக்கும் ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்து உருவாகி இருக்கும் படம் 'செவப்பி'. இதை ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன் தயாரித்துள்ளனர். ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான் சிறுவன். ஒரு கட்டத்தில் அதைப் பிரிய நேரிடுகிறது. இதனால் ஒன்றாக வாழும் அந்தக் கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது கதை. இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.


Next Story