

'அக்லி ஸ்டோரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் அவிகா கோர் மற்றும் ஸ்ரீ நந்து ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த கதைக்களத்துடன் உருவான இந்தப் படத்தை பிரணவ் ஸ்வரூப் இயக்கியுள்ளார். படம் கடந்த மே 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் அது பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை. இதனால் படம் விரைவாக ஓடிடியில் வெளியாகி உள்ளது.
அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் 'அக்லி ஸ்டோரி' ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் திரையரங்குகளில் பார்க்கத் தவறிய ரசிகர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே படத்தை ரசிக்க முடியும்.
திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறிய 'அக்லி ஸ்டோரி', ஓடிடி தளத்தில் புதிய பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக காதல் மற்றும் திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களிடையே இந்தப் படம் எந்தளவு வரவேற்பைப் பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கும்.