

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
"துரந்தர் தி ரிவெஞ்ச்"
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் மெகா ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக 'துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"காளிதாஸ் 2"
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், பவானி ஸ்ரீ, அபர்ணதி நடிப்பில் உருவான கிரைம் திரில்லர் படமான 'காளிதாஸ் 2'.இதில் பரத் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இப்படம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இதன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படம் தற்போது பிரைம் வீடியோ, சன் நெக்ஸ்ட், சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
"கப்"
மலையாளத்தில் வெளிவந்த ஸ்போர்ட் ட்ராமா திரைப்படம் 'கப்'. மாவட்ட அளவிலான கோப்பையை வெல்வதை இலக்காகக் கொண்ட ஒரு இளைஞனைப் பற்றிய கதை.நடிகர்கள்: மேத்யூ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
"மிஸ்டர் எக்ஸ்"
பிரின்ஸ் பிக்சர்ஸ் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் கடந்த மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"ஒரு துரோக சாஹச்சர்யத்தில்"
ஒரு துரோக சாஹச்சர்யத்தில் என்பது ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் எழுதி இயக்கிய, மலையாள மொழி மர்ம நகைச்சுவை திரில்லர் திரைப்படமாகும்.இதில் குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன், சஜின் கோபு, மற்றும் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் 2வது சீசன் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீசாகவுள்ளது.
"எக்ஸாம்"
பிரபல இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘எக்ஸாம்’. இந்த தொடரில் அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரபரப்பு திருப்பங்கள் நிறைந்த நாடகமாக உருவாகியுள்ள எக்ஸாம் வெப் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற 15ம் தேதி (நாளை) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.