"கேம் சேஞ்சர் " படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு


கேம் சேஞ்சர்  படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2025 1:59 PM IST (Updated: 24 May 2025 5:34 PM IST)
t-max-icont-min-icon

ராம் சரண் நடித்துள்ள "கேம் சேஞ்சர் " திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 10ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

'கேம் சேஞ்சர்' படம் முதல் நாளில் ரூ. 186 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வருகிற 7ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story