வெளியான 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வரும் ''காதி'' : அனுஷ்காவின் ஆக்சன் படத்தை எப்போது, ​​எதில் பார்க்கலாம்?


Ghaati OTT Release: Heres When And Where To Watch Anushka Shettys Action Drama
x
தினத்தந்தி 24 Sept 2025 6:46 PM IST (Updated: 24 Sept 2025 6:47 PM IST)
t-max-icont-min-icon

''காதி'' படம் திரையரங்குகளில் வெளியான 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்துள்ளது

சென்னை,

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ''காதி''. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கிய இந்தப் படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கதை நன்றாக இருந்தாலும், அதனை கிரிஷால் ஈர்க்கும் முறையில் கொடுக்க முடியவில்லை. இதன் விளைவாக படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், இந்தப் படம் வெளியான 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்துள்ளது. ரிலீசாகி 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட நிறுவனம் திட்டமிட்டிருந்தநிலையில், படம் எதிர்பார்த்தபடி ஓடாததால், ஓடிடிக்கு முன்கூட்டியே கொண்டு வர முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி, அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

1 More update

Next Story