'குட் பேட் அக்லி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'குட் பேட் அக்லி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்றது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பிய இப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com