ஜிவி பிரகாஷின் “இம்மோர்டல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?

ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்துள்ள ‘இம்மோர்டல்’ படம் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி வெளியானது.
ஜிவி பிரகாஷின் “இம்மோர்டல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?
Published on: 

ஜிவி பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் வெளியான ‘இம்மோர்டல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடித்த ‘இம்மோர்டல்’ படம் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி வெளியானது. இதில் டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.

ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் திரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ரொமான்ஸ், திரில்லர், பேன்டஸி கதைக்களத்தில் இப்படம் உருவாகியிருந்தது.

‘இம்மோர்டல்’ படம் ஜூலை 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘இம்மோர்டல்’ படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் வெளியான ‘இம்மோர்டல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com