ஓடிடியில் வெளியாகும் ''ஹரி ஹர வீரமல்லு''...எதில், எப்போது?


Hari Hara Veera Mallu locks OTT premiere date
x
தினத்தந்தி 4 Aug 2025 7:30 AM IST (Updated: 20 Aug 2025 11:26 AM IST)
t-max-icont-min-icon

“ஹரி ஹர வீரமல்லு” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் பவன் கல்யாணின் "ஹரி ஹர வீர மல்லு" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இது பவன் கல்யாணின் கம்பேக் படமாக இருந்தபோதிலும், பலவீனமான இரண்டாம் பாதி மற்றும் மோசமான விஎப்எக்ஸ் காட்சிகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.

இதன் விளைவாக, தயாரிப்பாளர்கள் படத்தை திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியிட அனுமதித்துள்ளதாக தெரிகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்ற அமேசான் பிரைம் வீடியோ, இதை வருகிற 22-ம் தேதி முதல் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

1 More update

Next Story