ஓடிடியில் வெளியாகும் 'ஹரோம் ஹரா'

'ஹரோம் ஹரா' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் வெளியாகும் 'ஹரோம் ஹரா'
Published on

பெங்களூரு,

தெலுங்கு சினிமா நடிகர் சுதீர் பாபு. இவர் சிவா மனசுல ஸ்ருதி, பாகி, சம்மோகனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த 'ஹரோம் ஹரா' படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியானது. இந்தப்படத்தில் மாளவிகா ஷர்மா, சுனில், ஜெயபிரகாஷ், ரவி காலே, அர்ஜுன் கவுடா மற்றும் பிரனீத் அனுமந்த்வோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஞானசாகர் துவாரகா எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சவுகான் பரத்வாஜ் இசையமைக்க, அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 11-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் 'ஹரோம் ஹரா' திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com