!-- afp header code starts here -->

'இந்தியன் 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட்


இந்தியன் 2 படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட்
x
தினத்தந்தி 1 Aug 2024 9:47 PM IST (Updated: 1 Aug 2024 9:53 PM IST)
t-max-icont-min-icon

'இந்தியன் 2' திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி 'இந்தியன் 2' படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் 'இந்தியன் 2' பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

வழக்கமாக திரைப்படங்கள் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்தே திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும். ஆனால் இந்தியன் 2 திரைப்படம் அதற்கு முன்னரே நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'இந்தியன் 2' திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 9-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

'இந்தியன் 2' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 3 படம் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story