'கங்குவா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
'கங்குவா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்
Published on

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக கங்குவா அமைந்தது. இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான இப்படம் வெளியாகி உள்ளது. 11ம் நூற்றாண்டு மற்றும் தற்காலத்தில் நடக்கும் காட்சிகள் 'கங்குவா' படத்தில் இடம் பெற்றுள்ளன.

கங்குவா படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.60 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தான் சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாகும். இதற்கிடையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளம் சுமார் ரூ. 100 கோடிக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் கடந்த 14-ம் தேதி வெளியான நிலையில் ஓ.டி.டி.யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com