'மிஸ் யூ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்

என் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான 'மிஸ் யூ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
'மிஸ் யூ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்
Published on

நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.

இந்நிலையில், இவரது நடிப்பில் என் ராஜசேகர் இயக்கத்தில் கடந்த 13-ந் தேதி வெளியான படம் 'மிஸ் யூ'. இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை, தீவிரமாகக் காதலிக்கிறான் ஏன் ? எப்படி? எதற்கு? தனக்குப் பிடிக்கவில்லை எனும்போதும், நாயகன் ஏன் காதலிக்கிறான் எனும் கேள்விக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்தான் இந்தப்படத்தின் கதை.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 26-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com