'சங்கராந்திகி வஸ்துன்னம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்


சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்
x

வெங்கடேஷ் நடித்துள்ள 'சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், தற்போது நடித்துள்ள படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. அனில் ரவிபுடி இயக்கி இருக்கும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த நிலையில், வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஜீ குழுமம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 'சங்கராந்திகி வஸ்துன்னம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 20-ந் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story