சந்தானம் நடித்த 'இங்க நான் தான் கிங்கு' ஓ.டி.டி.யில் வெளியானது

சந்தானம் நடித்த ‘இங்க நான் தான் கிங்கு’ படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
சந்தானம் நடித்த 'இங்க நான் தான் கிங்கு' ஓ.டி.டி.யில் வெளியானது
Published on

சென்னை,

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படமானது கடந்த மே மாதம் 17-ம் தேதி வெளியானது.

 காமெடி கலந்த கதை களத்தில் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டது. இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com