ஓ.டி.டி.யில் வெளியாகும் கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படம்


ஓ.டி.டி.யில் வெளியாகும் கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படம்
x

கங்கனா ரனாவத் நடித்துள்ள 'எமர்ஜென்சி' படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படம் கடந்த 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத்தின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், எமர்ஜென்சி படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பொதுவாக பாலிவுட் படங்கள் திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும். அதன்படி, எமர்ஜென்சி படம் மார்ச் மாதத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story