ஓ.டி.டிக்கு வரும் கீர்த்தி சுரேஷின் “ரிவால்வர் ரீட்டா” படம் - எங்கு, எப்போது பார்க்கலாம்?


ஓ.டி.டிக்கு வரும் கீர்த்தி சுரேஷின் “ரிவால்வர் ரீட்டா” படம் - எங்கு, எப்போது பார்க்கலாம்?
x

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ வருகிற 26-ந்தேதி நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் வெளியாகிறது.

தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ படம் கடந்த நவம்பர் 28ம் தேதி வெளியானது. இந்த படத்தினை இயக்குனர் ஜே. கே. சந்துரு டார்க் காமெடி ஜானரில் இயக்கியிருந்தார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடிங் கிங்ஸ்லி, சென்ட்ராயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. கீர்த்தி சுரேஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், ஒரு முழுமையான திரைப்படமாக இது ரசிகர்களைக் கவரவில்லை என்றே கூறப்படுகிறது. இத்திரைப்படம் ரூ. 5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 26-ந்தேதி நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் வெளியாகிறது.

1 More update

Next Story