கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த இப்படம் கடந்த டிசம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 22-ம் தேதி ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com