மலையாள ஆக்‌ஷன் ஹிட் 'காட்டாளன்'... ஓடிடி ரிலீஸுக்கு ரெடி

பால் ஜார்ஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம், காடு மற்றும் உயிர் பிழைப்பை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ளது.

மலையாள ஆக்‌ஷன் ஹிட் 'காட்டாளன்'... ஓடிடி ரிலீஸுக்கு ரெடி
Published on

மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான 'கட்டாளன்', தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

மனோரமா மேக்ஸில் ஸ்ட்ரீமிங்

'கட்டாளன்' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை மனோரமா மேக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் ஸ்ட்ரீமிங் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

காட்டை மையமாகக் கொண்ட அதிரடி கதை

பால் ஜார்ஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம், காடு மற்றும் உயிர் பிழைப்பை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. அதிகாரம், பழிவாங்குதல் மற்றும் உயிர் காக்கும் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

நட்சத்திர பட்டாளம்

'கட்டாளன்' படத்தில் ஆண்டனி வர்கீஸுடன் துஷாரா விஜயன், சுனில், சித்திக், ஜெகதீஷ், கபீர் துஹான் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com