

திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. இவர் ஜன கண மன, குயின் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்தநிலையில் தற்போது இவர் இயக்கியுள்ள 'மலையாளி பிரம் இந்தியா' படத்தில் நடிகர் நிவின் பாலி நடித்துள்ளார். ஜேக்ஸ் பெஜோய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் தியான் ஸ்ரீனிவாசன் மற்றும் அனஸ்வர ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படம் கடந்த மே 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம், வரும் 5-ந் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.