மெய்யழகன் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி எப்போது? வெளியான தகவல்

பிரேம் குமார் இயக்கிய 'மெய்யழகன்' படம் வருகிற 27ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
மெய்யழகன் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி எப்போது? வெளியான தகவல்
Published on

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டிஎன்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தில் வரும், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் கடந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 27ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com