ஓடிடியில் வெளியாகும் ’மிராய்’...தேஜாவின் பிளாக்பஸ்டர் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?


Mirai OTT release: Jio Hotstar reveals the streaming date of Teja Sajja’s blockbuster
x
தினத்தந்தி 4 Oct 2025 12:21 PM IST (Updated: 4 Oct 2025 2:04 PM IST)
t-max-icont-min-icon

மிராய் இப்போது ஓடிடி பார்வையாளர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது.

சென்னை,

தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான பேண்டஸி ஆக்‌ஷன் சாகசப் படமான மிராய் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கார்த்திக் கட்டம்னேனி இயக்கிய இந்தப் படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்தது,

மிராய் இப்போது ஓடிடி பார்வையாளர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது. இந்த படம் வருகிற 10 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இந்தி பதிப்பு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் மற்றும் கெட்அப் ஸ்ரீனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கவுரா ஹரி இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story