இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் - (02.06.25 முதல் 08.06.25 வரை)


இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் - (02.06.25 முதல் 08.06.25 வரை)
x

இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள்ஓ.டி.டி தளங்கள்
டூரிஸ்ட் பேமிலிடென்ட்கொட்டா, ஜியோ ஹாட்ஸ்டார்
சின்னர்ஸ்அமேசான் பிரைம்
வானில் தேடினேன்ஆஹா தமிழ்
ஜாத் நெட்பிளிக்ஸ்
லால் சலாம்சன் நெக்ஸ்ட்
வடக்கன்ஆஹா தமிழ்
தேவிகா & டேனிஜியோ ஹாட்ஸ்டார்

பிரிடேட்டர்: கில்லர் ஆப் கில்லர்ஸ்

ஜியோ ஹாட்ஸ்டார்

'டூரிஸ்ட் பேமிலி'

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படம் "டூரிஸ்ட் பேமிலி" . இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.

வெளியீட்டு தேதி: ஜூன் 02, 2025

எங்கே பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார், டென்ட்கொட்டா

'சின்னர்ஸ்'

சின்னர்ஸ் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் படமாகும். இதனை ரியான் கூக்லர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மைக்கேல் பி. ஜோர்டான் இரட்டை வேடங்களில் குற்றவாளி இரட்டை சகோதரர்களாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹெய்லி ஸ்டெய்ன்பீல்ட், மைல்ஸ் கேட்டன், ஜாக் ஓ'கானெல், டெல்ராய் லிண்டோ ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

வெளியீட்டு தேதி: ஜூன் 03, 2025

எங்கே பார்க்கலாம்: அமேசான் பிரைம்

'வானில் தேடினேன்'

ஆல்வின் தேவா எழுதி இயக்கியுள்ளார், தொடர் 'வானில் தேடினேன்'. இதில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் கிஷான் சி.வி, மதன் குமார், பூஜா சௌந்தர், சிவராம், ஹரிப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெளியீட்டு தேதி: ஜூன் 05, 2025

எங்கே பார்க்கலாம்: ஆஹா தமிழ்

'ஜாத்'

கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடித்துள்ள படம் 'ஜாத்'. ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இதில் ரெஜினா கசன்ட்ரா, ரம்யா கிருஷ்ணன், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெளியீட்டு தேதி: ஜூன் 05, 2025

எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

'லால் சலாம்'

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார்.

வெளியீட்டு தேதி: ஜூன் 06, 2025

எங்கே பார்க்கலாம்: சன் நெக்ஸ்ட்

'வடக்கன்'

கிஷோர் நடித்த வடக்கன் என்ற மலையாளத் திரைப்படம் சஜீத் ஏ இயக்கியுள்ளார். இது சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் நாடகமாகும், இதில் கிஷோர் மற்றும் ஸ்ருதி மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வெளியீட்டு தேதி: ஜூன் 06, 2025

எங்கே பார்க்கலாம்: ஆஹா தமிழ்

'தேவிகா & டேனி'

ஸ்ரீகரம் புகழ் பி கிஷோர் இயக்கியுள்ள படம் 'தேவிகா & டேனி'. இதில் தேவிகாவாக ரிது வர்மாவும், டேனியாக சூர்யாவும் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சுப்பராஜு, கோவை சரளா, சோனியா சிங், விவா ஹர்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வெளியீட்டு தேதி: ஜூன் 06, 2025

எங்கே பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்

'பிரிடேட்டர்: கில்லர் ஆப் கில்லர்ஸ்'

பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸ் என்பது டான் டிராக்டன்பெர்க் மற்றும் ஜோசுவா வாஸங் ஆகியோரால் இயக்கப்பட்ட அனிமேஷன் படமாகும். அதிரடி திகில் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை 20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் மற்றும் டேவிஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.

வெளியீட்டு தேதி: ஜூன் 06, 2025

எங்கே பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்

1 More update

Next Story