இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 14.04.25 முதல் 20.04.25 வரை

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ள படங்கள் குறித்த ஒரு பார்வை.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
எமகாதகி | ஆஹா தமிழ் |
ஜென்டில்வுமன் | டென்ட்கொட்டா |
கத்திஸ் கேங் | சிம்பிலி சவுத் |
கேப்டன் அமெரிக்கா பிரேவ் தி நியூ வேர்ல்ட் | அமேசான் பிரைம் |
லக் அவுட் | ஜீ 5 |
'எமகாதகி'
இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் மையாக கொண்டு உருவாகியுள்ள படம் 'எமகாதகி'. இப்படத்தை ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜாதி, காதல், ஆவணப்படுகொலை ஆகியவற்றை பேசும் இப்படம் கடந்த 14-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஜென்டில்வுமன்'
அறிமுக இயக்குனர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்' திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 14-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்'
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் 'கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்'. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான 'பால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்' வெப் தொடரில் நடித்த ஆண்டனி மெக்கீ இதில் கேப்டன் அமெரிக்காவாக நடித்துள்ளார். இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் நான்காவது கேப்டன் அமெரிக்கா திரைப்படமாகும். இப்படம் கடந்த 15-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கத்திஸ் கேங்'
கத்திஸ் கேங் என்பது ஒரு மலையாளம் திரில்லர் திரைப்படம். இதில் உன்னி லாலு மற்றும் சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை அனில் தேவ் இயக்கியுள்ளார். ஒரு கிராமத்தின் பின்னணியில் உருவான இப்படம் திரையறங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நாளை (18-ந் தேதி) சம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'லாக் அவுட்'
அமித் கோலானி இயக்கியுள்ள படம் 'லாக் அவுட்'. இதில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் மற்றும் புவன் பாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு இளைஞன் தனது ஆன்லைன் நற்பெயரால் பிணைக் கைதியாகப் பிடிபடும் கதையைச் சொல்கிறது. இந்த நிலையில், இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.






