இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் - (23.06.25 முதல் 29.06.25 வரை)


இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் - (23.06.25 முதல் 29.06.25 வரை)
x

இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள் ஓ.டி.டி தளங்கள்
பஞ்சாயத்து சீசன் 4அமேசான் பிரைம்
ரெய்டு 2நெட்பிளிக்ஸ்
ஆசாதிமனோரமா மேக்ஸ், சன் நெக்ஸ்ட்
ஸ்குவிட் கேம் சீசன் 3நெட்பிளிக்ஸ்
மிஸ்ட்ரிஜியோ ஹாட்ஸ்டார்

விராதபாலம்

ஜீ 5

"பஞ்சாயத்து சீசன் 4"

தீபக் குமார் மிஸ்ரா இயக்கிய முதல் மூன்று சீசன் வெற்றியை தொடர்ந்து 4-வது சீசன் உருவாகியுள்ளது. இதில் ஜிதேந்திர குமார், நீனா குப்தா மற்றும் பிரிஜ் பூஷண் துபே உள்ளிட்டோர் நடித்துள்ளார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த தொடர் கடந்த 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"ரெய்டு 2"

அஜய் தேவ்கன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்த கிரைம் திரில்லர் படம் 'ரெய்டு 2'. ராஜ் குமார் குப்தா இயக்கியிருக்கும் இப்படத்தில், வாணி கபூர், ரஜத் கபூர், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

"ஆசாதி"

ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாசி நடித்துள்ள படம் 'ஆசாதி'. இதில் விஜயகுமார், ரவீனா ரவி, டிஜி ரவி, ராஜேஷ் சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். மருத்துவம் தொடர்பான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை மனோரமா மேக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

"ஸ்குவிட் கேம் சீசன் 3"

பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய 'ஸ்குவிட் கேம் சீசன் 3' நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த சீசன் தான் இந்த தொடரின் கடைசி சாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story