நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்


நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
x
தினத்தந்தி 13 March 2025 11:16 PM IST (Updated: 14 March 2025 12:16 PM IST)
t-max-icont-min-icon

நாளை ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ள படங்கள் குறித்த ஒரு பார்வை.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நாளை எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

'பயர்'

அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'பயர்'. இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 2020-ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'ராமம் ராகவம்'

தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ராமம் ராகவம்'. இந்த படத்தில் மோக்ஷா, சுனில், சத்யா, பாலிரெட்டி பிருத்விராஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக உருவாகி உள்ளது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட், ஈடிவி வின் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

'2கே லவ் ஸ்டோரி'

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை ஆஹா தமிழ் மற்றும் சிம்பிலி சவுத் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

'பொன்மேன்'

பேசில் ஜோசஃப், சஜின் கோபு, லிஜோமோல் ஜோஸ், ஆனந்த் மன்மதன் மற்றும் தீபக் பரம்பொல் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பொன்மேன் திரைப்படம். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் நாளை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

'சீசா'

நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் 'சீசா'. இப்படத்தில் நிஷாந்த் ரூசோ மற்றும் பாடினி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்ல் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நாளை சிம்பிலி சவுத் மற்றும் ஆஹா தமிழ் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

'காதல் என்பது பொதுவுடைமை'

ஓரினசேர்க்கையாளர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, வீட்டில் அவர்களை எம்மாதிரி நடத்துகின்றனர். அவர்கள் படும் கஷ்டத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகிணி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

'தி மலபார் டேல்ஸ்'

அனில் குன்ஹப்பன் எழுதி இயக்கியுள்ள மலையாள படம் 'தி மலபார் டேல்ஸ்'. இந்த படத்தில் சிவராஜ், பிரதீப் பாலன், அனில் ஆண்டோ, அனுப்ரியா ஏகே, நவ்யா பைஜு, அர்த்ரா தேவி மற்றும் பலர் நடித்துள்ளனர். சாக் போர்டு பிலிம்ஸின் கீழ் பிரீத்தா அனில் தயாரித்துள்ள இப்படம் சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'பி ஹேப்பி'

ரெமோ டிசோசா இயக்கத்தில் அபிஷேக் பச்சன், இனயத் வர்மா மற்றும் நோரா பதேஹியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'பி ஹேப்பி'. இப்படம் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

'மோனா 2 '

மோனா படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மோனா படம் செம ஹிட் அடித்ததால், மோனா 2 படத்தினை டிஸ்னி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், நாளை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

'வன்வாஸ்'

நானா படேகர் மற்றும் உத்கராஷ் ஷர்மா நடித்த திரைப்படம் 'வன்வாஸ்'. டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட வயதான தந்தையின் கதையை இது விவரிக்கிறது. அனில் ஷர்மா இயக்கிய இப்படம் நாளை ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

'தி எலக்ட்ரிக் ஸ்டேட்'

அந்தோனி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கிய அமெரிக்க அறிவியல் புனைகதை சாகச நகைச்சுவைத் திரைப்படம் 'தி எலக்ட்ரிக் ஸ்டேட்'. இத்திரைப்படத்தில் கே ஹூய் குவான், ஜேசன் அலெக்சாண்டர், வூடி ஹாரல்சன், அந்தோனி மேக்கி, மில்லி பாபி பிரவுன் மற்றும் கிறிஸ் பிராட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.


Next Story