முனீஸ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’.. ஓடிடியில் வெளியாவது எப்போது?

முனீஸ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முனீஸ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’.. ஓடிடியில் வெளியாவது எப்போது?
Published on

சூது கவ்வும்', முண்டாசுப்பட்டி', ஜிகர்தண்டா', டார்லிங்-2', மாநகரம்', டிடி ரிட்டன்ஸ்', கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது 'மிடில் கிளாஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தினை தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை அடிப்படையாக கொண்டு உருவான மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 24ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com