நித்தின் நடித்த "தம்முடு" படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

நித்தின், சப்தமி கவுடா நடித்துள்ள ‘தம்முடு’ படம் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நித்தின் நடித்த "தம்முடு" படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
Published on

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு படங்களில் ஒன்று, தம்முடு. நித்தின் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் காந்தாரா புகழ் சப்தமி கவுடா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஜூலை 4 -ம் தேதி வெளியானது.

தம்முடுவில் ஸ்வாசிகா, வர்ஷா பொல்லம்மா, சவுரப் சச்தேவா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியது.

சினிமா திரையரங்குகளில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும், வசூலில் ஏமாற்றத்தை சந்தித்தது. இந்நிலையில் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com