தியேட்டர்களில் மட்டுமல்ல… ஓடிடியையும் கலக்க வரும் பாலையாவின் "அகண்டா 2"

தியேட்டர்களில் ஹிட் கொடுத்த அகண்டா 2 படம், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலையா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் அகண்டா 2. இந்தப் படம் 2021-ல் எடுக்கப்பட்ட ‘அகாண்டா’ படத்தின் 2ம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சம்யுக்தா, ஆதி பினிசெட்டி நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். 14 ரீல்ஸ் பிளஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளன.
இந்த படத்தில் பாலையா அகோரியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக ஆதி பினிசெட்டி அமானுஷ்ய சக்திகளுடன் நடித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தியேட்டர்களில் ஹிட் கொடுத்த அகண்டா 2 படம், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படம் வருகிற 9ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.






