மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட 'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமம்

விஜய் நடித்து வரும் 'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட 'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது.

இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இதே போன்று வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் ரூ.78 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. அந்த வகையில், பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் மிகப்பெரிய தொகைக்கு ஜன நாயகன் படத்தின் உரிமையை கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரூ.121 கோடிக்கு ஜன நாயகன் படத்தின் டிஜிட்டல் உரிமம் கைப்பற்றப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com