பணத்தாசை காட்டி உயிரை பறிக்கும் நாற்காலி... தியேட்டரில் தோற்று ஓடிடியில் ஜெயித்த ஹாரர் திரில்லர்... எதில் பார்க்கலாம்?

படத்தின் நாயகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
பணத்தாசை காட்டி உயிரை பறிக்கும் நாற்காலி... தியேட்டரில் தோற்று ஓடிடியில் ஜெயித்த ஹாரர் திரில்லர்... எதில் பார்க்கலாம்?
Published on
Updated on

தியேட்டரில் வரவேற்பை பெற தவரிய ஹாரர் திரில்லர் படம் தற்போது ஓடிடியில் கவனம் ஈர்த்து வருகிறது.

ஓடிடியில் சூப்பர் ஹிட்

தியேட்டரில் வெற்றி பெறாமல், ஓடிடி தளங்களில் வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்கும் திரைப்படங்கள் ஏராளம். அந்தவகையில் வெள்ளித்திரையில் பெரிதாக கவனம் பெற தவறிய ஒரு படம், டிஜிட்டல் தளங்களில் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. அப்படிப்பட்ட படம்தான் தற்போது நாம் பார்க்க போகும் திரைப்படம்.

படத்தின் கதை

படத்தின் நாயகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு கிரிக்கெட் பெட்டிங் (Betting) மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்கிறார். கடனை அடைப்பதற்காக, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் பணத்தை எடுத்து மீண்டும் பெட்டிங்கில் முதலீடு செய்கிறார்.

ஆனால், இந்த மோசடி நிறுவனத்திற்கு தெரியவர, அவரை வேலையிலிருந்து நீக்குவதோடு மட்டுமல்லாமல், போலீசிலும் புகார் அளிக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவரது காதலி ருதி உறுதுணையாக நிற்கிறார்.

பழங்கால நாற்காலி

ஒருநாள், ருதி ஒரு பழங்கால நாற்காலியை (Antique Chair) அதிக விலை கொடுத்து வீட்டிற்கு வாங்கி வருகிறார். ஆனால், அந்த நாற்காலியில் ஒரு கொடிய தீய சக்தி குடியிருக்கிறது. அந்த ஆவி நாயகன் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறது.

விக்ரமின் பணத்தாசையை பயன்படுத்திக் கொள்ளும் அந்த தீய சக்தி, சில நிபந்தனைகளுடன் அவர் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க தொடங்குகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? அந்த நாற்காலியின் பின்னணி என்ன? விக்ரமின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த ஹாரர் மிஸ்டரி திரில்லர் திரைப்படத்தின் மீதி கதை.

படத்தின் விவரம்

இப்படத்தின் பெயர் ’தி டெவில்ஸ் சேர்’ (The Devil's Chair). கங்கா சப்தஷிகாரா இயக்கியுள்ள இதில் ஜபர்தஸ்த் புகழ் நகைச்சுவை நடிகர் அதிரே அபி நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஸ்வாதி மண்டல், சத்ரபதி சேகர், வெங்கட் துக்கிரெட்டி, அத்விதா சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எங்கே பார்க்கலாம்?

இந்தத் திரைப்படம் தற்போது பிரபல தெலுங்கு ஓடிடி தளமான ஆகா (Aha)-வில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. அதேசமயம், யூடியூபிலும் (YouTube) இந்த படம் உள்ளது. எனவே, ஒரு தரமான ஹாரர்திரில்லர் படத்தை பார்க்க விரும்புபவர்கள், யூடியூபில் இந்த படத்தை இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com