பிறந்தநாளில் கொலை…கணிக்க முடியாத கிளைமாக்ஸ் - சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லர் - எதில் பார்க்கலாம்?

இப்படம், முழுவதும் சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பியுள்ளது.
பிறந்தநாளில் கொலை…கணிக்க முடியாத கிளைமாக்ஸ் - சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லர் - எதில் பார்க்கலாம்?
Published on

மலையாள படங்கள் ஓடிடி தளங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கிரைம்-திரில்லர் வகை படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ’ஆபிரகாம் ஓஸ்லர்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் ஒரு சீரியல் கில்லரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பிறந்தநாளில் பலரை கொலை செய்யும் ’பிறந்தநாள் கொலைகாரன்’ (Birthday Killer) பற்றிய பரபரப்பான கதைக்களம் கொண்ட இப்படம், முழுவதும் சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பியுள்ளது. ஒரு மென்பொருள் ஊழியர் தனது பிறந்தநாளிலேயே கொலை செய்யப்படுவதால் தொடங்கும் விசாரணை, பல அதிர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.

இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெயராம் நடித்துள்ளார். மேலும் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அனஸ்வரா ராஜன், அர்ஜுன் அஷோகன், அர்ஜுன் குரியன், அனூப் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிதுன் மானுவல் தாமஸ் இயக்கிய இந்த படம் 2024ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com