’கபடி வீரர்’ டூ ’கேங்க்ஸ்டர்’ - ரசிகர்களை கவரும் 'லிங்கம்' வெப் சீரிஸ்... எதில், எப்போது பார்க்கலாம்?

இந்த வெப் தொடரில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார்.
’கபடி வீரர்’ டூ ’கேங்க்ஸ்டர்’ - ரசிகர்களை கவரும் 'லிங்கம்' வெப் சீரிஸ்... எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

சென்னை,

உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் கிரைம் திரில்லர் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு ஓடிடி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள புதிய கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் ‘லிங்கம்’ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கபடி வீரரின் வாழ்க்கையை மாற்றிய கொலை வழக்கு

இந்த தொடரில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார். கதையின்படி, திறமையான கபடி வீரராக இருக்கும் அவர் எதிர்பாராத சூழ்நிலையால் ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொள்கிறார்.

தவறு செய்யாத நிலையிலும், விதியின் விளையாட்டால் போலீசாரிடமிருந்து தப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அவர் அண்டர்வேர்ல்ட் உலகிற்குள் நுழைந்து, பின்னர் சக்திவாய்ந்த கேங்க்ஸ்டராக மாறுகிறார்.

அதன்பிறகு அவர் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்புகிறாரா? கபாடி உலகில் சாதிக்கிறாரா? அல்லது குற்ற உலகிலேயே மூழ்கிப் போகிறாரா? என்பதுதான் தொடரின் மையக்கதை.

நட்சத்திர பட்டாளம்

‘லிங்கம்’ தொடரில் கதிருடன் இணைந்து திவ்ய பாரதி, பூர்ணிமா ரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரை எழுத்தாளரும் இயக்குநருமான லட்சுமி சரவணகுமார் இயக்கியுள்ளார்.

ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்

ஏற்கனவே வெளியாகியுள்ள டீஸர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘லிங்கம்’ வெப் சீரிஸ் வரும் 26 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com