மீனாட்சி சவுத்ரி நடித்த 'மட்கா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு


மீனாட்சி சவுத்ரி நடித்த மட்கா படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

'மட்கா' படத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜ் கதாநாயகனாக நடித்தார்.

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' மற்றும் விஜய்யின் 'தி கோட்' ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார். குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள இவர், துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து, பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜ் நடிப்பில் வெளியான மட்கா படத்தில் நடித்தார். கருணா குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தினை, வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில், டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் தயாரித்தனர்.

கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சோபிக்க தவறியது. இந்நிலையில், மட்கா படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 5-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story