'பரமசிவன் பாத்திமா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'பரமசிவன் பாத்திமா' படத்தினை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.
'பரமசிவன் பாத்திமா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் 'பரமசிவன் பாத்திமா' என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தினை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கதாநாயகியாக சாயாதேவி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசும் வகையில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பரமசிவன் பாத்திமா திரைப்படம் வருகிற 4-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com