'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய 'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
Published on

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய  இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்து இருந்தனர். விக்னேஷ் , லிவிங்ஸ்டன் , செந்தில் , ஜீவிதா , கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்தனர்.

லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 7-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com