ஜமா படத்தின் ஓ.டி.டி அப்டேட்

நடிகை அம்மு அபிராமி நடித்த 'ஜமா' திரைப்படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜமா படத்தின் ஓ.டி.டி அப்டேட்
Published on

சென்னை,

'கூழாங்கல்' திரைப்படத்தை உருவாக்கிய லெர்ன் அண்ட் டெக் புரோடக்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடந்ததாக படமாக்கப்பட்டுள்ளது.

பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார். இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் மிகைப்படுத்தலை தவிர்த்து, உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது.

அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பார்த்தா எம்.ஏ. படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீகாந்த் கோபால் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார். அம்மு அபிராமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவர். இவர் பைரவா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுஷின் அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் சில விமர்சனங்களைப் பெற்றாலும் விமர்சகர்களால் பாராட்டுகளைப் பெற்றது. இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com