

‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்வதி திருவோத்து நடிப்பில் வெளியான ‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’ திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
இயக்குநர் ஷகத் இயக்கத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, சித்தார்த் பரதன், மாத்யூ தாமஸ், உன்னி மாயா உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் ‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் நடக்கும் அதிகார அத்துமீறல்கள் குறித்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் நல்ல கருத்துகளைப் பெற்றது. காவல் அதிகாரியாக நடிகை பார்வதியின் கதாபாத்திரமும் நன்றாக எழுதப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறியிருந்தனர்.
இப்படம் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதையை பி. எஸ். சுப்ரமணியம், விஜேஷ் தொட்டிங்கல் ஆகியோர் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், ‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.