

பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘கலிஃபா’ திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான ‘கலிஃபா’ ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். ஜினு ஆபிரகாம் இதற்கு முன்பு பிருத்விராஜ் நடித்த 'ஆடம் ஜோன்', 'கடுவா' உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.
தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு நாயகனுக்கும் கேங்ஸ்டருக்குமான கதையாக இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்தில், மாளவிகா ஷர்மா, கீர்த்தி ஷெட்டி, நிதின் முகேஷ், இந்திரன்ஸ், ஷம்மி திலகன், மோகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ‘கலிஃபா’ திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.