'புஷ்பா 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'புஷ்பா 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
Published on

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெறும் 6 நாட்களில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. தற்போது வரை ரூ.1,409 கோடி வரை வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.1,500 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com