''ரெய்டு 2'' ஓடிடி ரிலீஸ் : அஜய் தேவ்கனின் கிரைம் திரில்லர் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?


Raid 2 OTT release: When and where to watch Ajay Devgns crime thriller
x

'ரெய்டு 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அஜய் தேவ்கன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்த கிரைம் திரில்லர் படமான 'ரெய்டு 2'-ன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எதில், எப்போது பார்க்கலாம் என்பதை தற்போது காண்போம்.

அதன்படி, ''ரெய்டு 2'' படம் நாளை முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரெய்டு 2.

ராஜ் குமார் குப்தா இயக்கியிருக்கும் இப்படத்தில், வாணி கபூர், ரஜத் கபூர், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பாக்ஸ் ஆபிஸில் ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தற்போது டிஜிட்டல் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது.

1 More update

Next Story