தியேட்டரில் தெறிக்கவிட்ட ஹாரர் படம்... ஓடிடியில் அதிரடி காட்ட வரும் 'ரகசா' - எதில், எப்போது பார்க்கலாம்?

இப்படம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தியேட்டரில் தெறிக்கவிட்ட ஹாரர் படம்... ஓடிடியில் அதிரடி காட்ட வரும் 'ரகசா' - எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

ஐதராபாத்,

இளம் தெலுங்கு ஹீரோ சங்கீத் சோபன் நடிப்பில், பேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ரகசா' (Rakasa) திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகி வருகிறது. தியேட்டர்களில் ரசிகர்களைச் சிரிக்கவும் பயப்படவும் வைத்த இந்தப் படம், விரைவில் உங்கள் வீட்டுத் திரைகளுக்கு வரவுள்ளது.

நிஹாரிகா கொனிடேலாவின் 'பிங்க் எலிபண்ட் பிக்சர்ஸ்' மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குநர் மானசா சர்மா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சங்கீத் சோபனுக்கு ஜோடியாக நயன் சரிகா நடித்திருந்தார். தியேட்டர்களில் வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Also Read
ஓடிடியில் வெளியாகும் சுதர்ஷன் கோவிந்தின் “நீ பாரெவர்”... எதில், எப்போது பார்க்கலாம்?
தியேட்டரில் தெறிக்கவிட்ட ஹாரர் படம்... ஓடிடியில் அதிரடி காட்ட வரும் 'ரகசா' - எதில், எப்போது பார்க்கலாம்?

தற்போது இப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ஓடிடி ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. தியேட்டரில் வெளியான 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நெட்பிளிக்ஸில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் விரைவில் வெளியிடவுள்ளது.

இப்படத்தில் வெண்ணெலா கிஷோர், கெட்டப் சீனு, பிரம்மாஜி, தனிப்பெல்லா பரணி, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ரோகிணி எனத் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனுதீப் தேவ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com