

ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள ‘ராம் அண்ட் லீலா’ தற்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. அந்த வகையில், இந்த படம் நாளை (செப்டம்பர் 18-ம் தேதி) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ராம் அண்ட் லீலா’ என்ற படம் வெளியானது.
அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கிய இப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். இது வர்திகாவின் நடிப்பு அறிமுகப்படமாகும். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
30 வயது இளைஞரான ராம், திருமணத்திற்காக பெண் தேடும் நிலையில் லீலாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் உருவாகும் சூழலில், லீலா விதிக்கும் ஒரு வித்தியாசமான நிபந்தனை அவர்களது உறவில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. காதல், நகைச்சுவை மட்டுமின்றி எதிர்பாராத அறிவியல் புனைகதை திருப்பங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள ‘ராம் அண்ட் லீலா’ தற்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. காதல் கலந்த பொழுதுபோக்கு கதையுடன் உருவாகியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில், இந்த படம் நாளை (செப்டம்பர் 18-ம் தேதி) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள், இனி வீட்டிலிருந்தபடியே ஓடிடியில் ‘ராம் அண்ட் லீலா’ படத்தை காணலாம்.