

சென்னை,
மவுனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரசவாதி'. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடித்தனர். மேலும் இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
இதில், அர்ஜுன் தாஸ் ஒரு சித்த மருத்துவராக நடித்துள்ளார். ஒரு மருத்துவர் அவரது கோடை விடுமுறையை செலவிடுவதற்காக மலை கிராமத்திற்கு வருகிறார். அதன் பிறகு இவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசக்கூடிய படமாக இது அமைந்துள்ளது. இத்திரைப்படம் கடந்த மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் சிம்லி சவுத் ஓடிடி-யில் வரும் 21-ந் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.