'ஸ்குவிட் கேம்' 2-வது சீசனின் புதிய டீசர் வெளியானது

'ஸ்குவிட் கேம்' 2-வது சீசனின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'ஸ்குவிட் கேம்' 2-வது சீசனின் புதிய டீசர் வெளியானது
Published on

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி, தற்போது இந்தத் தொடரின் 2-வது சீசன் உருவாகி வருகிறது. மேலும், வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2-வது சீசனின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசரில் கதாநாயகனான லீ ஜுங் மீண்டும் ஸ்குவிட் கேம் விளையாட்டு 456 வீரராக விளையாட வருகிறார். ஆனால் இந்த தடவை அவர் மற்ற மக்களிடம் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என நிறுத்த வற்புறுத்துகிறார் ஆனால் யாரும் இவரது பேச்சை கேட்காமல் விளையாட தயாராவதுப் போல் டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.

தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு 'ஸ்குவிட் கேம்'.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com