ஓடிடியில் வெளியாகும் சன்னி தியோலின் 'ஜாத்'


Sunny Deols Jaat to be released on OTT
x

இப்படம் நெட்பிளிக்சில் வருகிற 5-ந்தேதி வெளியாகிறது.

சென்னை,

சன்னி தியோல், ரெஜினா கசன்ட்ரா, ரம்யா கிருஷ்ணன், ரன்தீப் ஹூடா நடிப்பில் வெளியான படம் ஜாத். வீரசிம்மா ரெட்டி, கிராக், டான் சீனு என தெலுங்கு சினிமாவில் ஹிட் படங்களை இயக்கிய கோபிசந்த் மல்லினேனி பாலிவுட்டில் இயக்கிய முதல் படம் இதுவாகும்.

கடற்கரை கிராமத்தின் மிகப்பெரிய தாதா அங்குள்ள மக்களை துன்புறுத்தி பணம், அதிகாரம், ஆடம்பரம் என ஏகபோகமாக வாழ்கிறார். இதனால் வெகுண்டெழும் நாயகன், தாதாவின் தளபதி ரவுடிகளை தொடர்ந்து கொல்கிறார்.

தன்னுடைய ஆட்களை இழக்கும் தாதா, அந்த கிராம மக்களை மிக கொடூரமாக வஞ்சிக்கிறார். இதன்பின்னர் நாயகன் எடுக்கும் முடிவுகளால் அவருக்கும் அந்த மீனவ கிராமத்துக்கும் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான படம். இப்படம் நெட்பிளிக்சில் வருகிற 5-ந்தேதி வெளியாகிறது.

1 More update

Next Story