

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் ராஹுல் பட் நாயகனாக நடித்து உருவான திரைப்படம் ‘கென்னடி’. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குத் தயாரான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது.
நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்றது. சர்வதேச அளவில் இப்படம் பாராட்டுகளைப் பெற்றாலும், இந்தியாவில் வெளியாவதற்குத் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில், ‘கென்னடி’ திரைப்படம் வரும் 20ம் தேதி நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.