சூர்யாவின் “சீன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘சீன்’ திரைப்படம், ரூ.280 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சூர்யாவின் “சீன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘சீன்’. தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியாக வெற்றிப் படமானது. சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடிகர் நஸ்லென் மற்றும் நஸ்ரியா ஆகியோரின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்ததால் அவர்களுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைப் பின்னணியால் இந்தப் படம் உலக அளவில் ரூ.280 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், ‘சீன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X