ஓ.டி.டி.யில் வெளியான பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படம்

'டீன்ஸ்' திரைப்படம் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.
ஓ.டி.டி.யில் வெளியான பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படம்
Published on

சென்னை,

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'டீன்ஸ்' (Teenz) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஒரு பள்ளியில் படிக்கும் நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் ஒரு குழுவாக காட்டிற்குள் செல்கின்றனர். அந்த காட்டில் நடக்கும் சில மர்மமான விஷயங்கள், பேய்கள் நடமாட்டம் ஆகியவற்றை பார்த்து பயந்த அவர்கள் எப்படி அங்கிருந்து வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். காட்டில் சிக்கிய மாணவர்களின் நிலை என்ன என்பதை திரில் மற்றும் சஸ்பென்ஸ் உடன் பார்த்திபன் வழங்கியுள்ள படம் தான் 'டீன்ஸ்'.

இந்தநிலையில், தற்போது 'டீன்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com