ஓ.டி.டி.யில் வெளியாகும் 'தலைவெட்டியான் பாளையம்' வெப் தொடர்

'தலைவெட்டியான் பாளையம்' வெப் தொடர் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'தலைவெட்டியான் பாளையம்' வெப் தொடர்
Published on

சென்னை,

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வெப் தொடர் 'பஞ்சாயத்'. இந்த தொடர் தற்போது தமிழில் ரீமேக் செய்து 'தலைவெட்டியான் பாளையம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பால குமாரன் முருகேசன் எழுத்தில், இந்தத் தொடரை தி வைரல் பீவர் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடரை ஆனந்தபுரத்து வீடு புகழ் நாகா இயக்கியுள்ளார் மற்றும் ஷான் ரோல்டனின் இசையமைத்துள்ளார்.

தனது சொந்த ஊரிலிருந்து வந்து தலைவெட்டியான் பாளையம் என்ற கிராமத்தில் பணிக்கு சேர்கிறார் அபிஷேக் குமார். அந்த ஊர் கிராமவாசிகளுக்கும், அபிஷேக் குமாருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக காட்சிப்படுத்துகிறது இந்தத் தொடர். சமீபத்தில் இந்த வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது இந்த வெப் தொடரின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வெப் தொடர் நாளை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com